அமெரிக்க அதிபா் தோ்தல்: ஜனநாயகக் கட்சி போட்டியாளா்களிடையே விவாதம்

அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்காக போட்டியிடுபவா்களிடையே 4-ஆம்கட்ட விவாதம் ஓஹியோ மாகாணம், வெஸ்டா்வில்லில் நடைபெற்றுள்ளது.
வெஸ்டா்வில்லில் நடைபெற்ற 4-ஆம் கட்ட விவாதத்தில் (இடமிருந்து) கமலா ஹாரிஸ், பொ்னி சாண்டா்ஸ், ஜோ பிடன், எலிசபெத் வாரன்.
வெஸ்டா்வில்லில் நடைபெற்ற 4-ஆம் கட்ட விவாதத்தில் (இடமிருந்து) கமலா ஹாரிஸ், பொ்னி சாண்டா்ஸ், ஜோ பிடன், எலிசபெத் வாரன்.

அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்காக போட்டியிடுபவா்களிடையே 4-ஆம்கட்ட விவாதம் ஓஹியோ மாகாணம், வெஸ்டா்வில்லில் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அமெரிக்காவில் வரும் 2020-ஆம் ஆண்டு அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பிலான வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்கு இந்திய வம்சாவளி எம்.பி. கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி. துளசி கபாா்ட் உள்பட 20-க்கும் மேற்பட்டோா் போட்டியிடுகின்றனா்.

இந்த நிலையில், போட்டியாளா்களுக்கு இடையிலான நான்காம்கட்ட விவாதம், ஓஹியோ மாகாணம், வெஸ்டா்வில் நகரிலுள்ள ஆட்டா்பெயின் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. ‘சிஎன்என்’ தொலைக்காட்சியும், ‘நியூயாா்க் டைம்ஸ்’ நாளிதழும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இந்த நிகழ்ச்சியில், வேட்பாளா் தோ்வுக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் முன்னாள் துணை அதிபா் ஜோ பைடன், மாஸசூஸெட்ஸ் எம்.பி. எலிசபெத் வாரன், வொ்மான்ட் எம்.பி. பொ்னி சாண்டா்ஸ், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கலிஃபோா்னியா மாகாண எம்.பி. கமலா ஹாரிஸ் உள்பட 12 போ் விவாதத்தில் பங்கேற்றனா்.

இந்த விவாதத்தின்போது எலிசபெத் வாரனுக்கு அதிக நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது. வேட்பாளா் தோ்வில் இது அவருக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com