பாகிஸ்தானில் தீபாவளியைக் கொண்டாடிய முஸ்லிம்கள்!

பாகிஸ்தானின் கராச்சியில் சுவாமி நாராயண் கோயிலில் ஹிந்துக்களுடன் இணைந்து முஸ்லிம்களும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பாகிஸ்தானின் கராச்சியில் சுவாமி நாராயண் கோயிலில் ஹிந்துக்களுடன் இணைந்து முஸ்லிம்களும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்ஏ ஜின்னா சாலையில் சுவாமி நாராயண் கோயில் அமைந்துள்ளது. இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடிய வகையில், அந்தக் கோயிலிலும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி கொண்டாடப்பட்டது. 

சிறுபான்மையின சமூக மக்களின் பண்டிகைகளை, அவர்களது வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் முஸ்லிம்களும் குறிப்பாக சில சமூக ஆர்வலர்களும் அங்கு உள்ளனர். அவர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்துக்கு ஹிந்துகளுடன் இணைந்து  ஏற்பாடு செய்துள்ளனர். 

இதுகுறித்து, அந்தக் கோயிலின் நிர்வாகி விஜய் மகாராஜ் தெரிவிக்கையில்,

"புனிதத் தருணங்களில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து கொண்டாடுவது இந்தக் கோயிலின் மரபாகும். இந்தக் கொண்டாட்டங்கள் ஹிந்துக்களின் நம்பிக்கையையும், மதக் கலாசாரத்தையும் மற்ற சமூகத்தினர் உன்னிப்பாக கவனிப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். தீபாவளித் திருநாளில் ஹிந்து மதத்தினர் தங்களது அன்பையும் மகிழ்ச்சியையும் மற்ற சமூகத்தினருடன் பகிர்ந்து கொள்வார்கள்" என்றார்.

மகளிர் மன்றத்தைச் சேர்ந்த குராத் மிர்சா தெரிவிக்கையில், "தீபாவளி கொண்டாட்டங்களில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இருப்பது மிகக் குறைவு. ஆனால் சிவில் சமூகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் இருப்பது போதுமான ஊக்கத்தை அளிக்கிறது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com