ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் காலமானார்

உடல்நலக் குறைவு காரணமாக ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகபே காலமானார். 
ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் காலமானார்

உடல்நலக் குறைவு காரணமாக ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகபே காலமானார். 

ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகபே(95). இவர்   1980 முதல் 1987 வரை ஜிம்பாப்வே பிரதமராகவும் இருந்துள்ளார். மேலும் அந்நாட்டின் குடியரசுத் தலைவர், அதிபர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார். 

வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ராபர்ட் முகபே சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. 

இத்தகவலை ஜிம்பாப்வேயின் தற்போதைய அதிபர் எம்மர்சன் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அத்துடன் மறைந்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகபேவுக்கு அவர் இரங்கலும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com