2022-இல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப பாகிஸ்தான் திட்டம்

வரும் 2022-ஆம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
2022-இல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப பாகிஸ்தான் திட்டம்

வரும் 2022-ஆம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, அந்நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் செளதரி ஃபாவாத் ஹுசைன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாகிஸ்தான் தனது முதல் விண்வெளி வீரரை வரும் 2022-ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் பணியாற்ற உள்ளது. இத்திட்டத்துக்கான விண்வெளி வீரர்கள் தேர்வு வரும் 2020-ஆம் ஆண்டில் 
தொடங்கும்.
முதல் கட்டமாக 50 வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதன் பின்னர், அவர்களிலிருந்து 25 வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். வீரர்கள் தேர்வில் பாகிஸ்தான் விமானப் படை முக்கியப் பங்கு வகிக்க உள்ளது. கடந்த 1963-ஆம் ஆண்டிலேயே விண்வெளிக்கு ராக்கெட்டை செலுத்திய நாடு, பாகிஸ்தான். ஆசிய கண்டத்தில் இச்சாதனையைப் புரிந்த இரண்டாவது நாடு பாகிஸ்தான். அதற்கு முன்பு முந்தைய சோவியத் யூனியன் மட்டுமே விண்வெளிக்கு ராக்கெட்டை செலுத்தியிருந்தது.
கடந்த ஆண்டு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களை சீன ராக்கெட்டின் உதவியுடன் விண்ணில் செலுத்தினோம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டால், பிராந்தியத்தில் பல நன்மைகள் உண்டாகும் என்றார் செளதரி ஃபாவாத் ஹுசைன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com