உக்ரைனுக்கான அமெரிக்கத் தூதர் ராஜிநாமா

உக்ரைனுக்கான அமெரிக்கத் தூதர் ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனுக்கான அமெரிக்கத் தூதர் ராஜிநாமா

உக்ரைனுக்கான அமெரிக்கத் தூதர் ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனுக்கான அமெரிக்க சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டவர் குர்ட் வோல்கர் . அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் மீது ஊழல் விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசுக்கு டிரம்ப் நெருக்கடி விவகாரத்தில் வோல்கருக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அமெரிக்க அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வோல்கருக்கு நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி உத்தரவிட்டார்.இந்த உத்தரவு வெளியான நிலையில், குர்ட் வோல்கர் விசாரணையை எதிர்கொள்வதற்காக தூதர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், உக்ரைனில் தொழில் செய்து வரும் அவர் மீது ஊழல் விசாரணை நடத்த அந்த நாட்டு அதிபர் வொலோதிமீர் ùஸலென்ஸ்கிக்கு அதிபர் டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை நாடாளுமன்றம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com