கருந்துளைக்கு ஹவாய் மொழியில் பெயர்

முதல் முறையாகப் படம் பிடிக்கப்பட்டுள்ள கருந்துளைக்கு(Black hole) பொவேஹி என பெயரிடப்பட்டுள்ளது.
கருந்துளைக்கு ஹவாய் மொழியில் பெயர்


முதல் முறையாகப் படம் பிடிக்கப்பட்டுள்ள கருந்துளைக்கு(Black hole) பொவேஹி என பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் ஹீலோ நகரிலுள்ள ஹவாய் பல்கலைக்கழக பேராசியர் லேரி கிமூரா அந்தக் கருந்துளைக்கு இப்பெயரைச் சூட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ட வெளியின் அதிசயமாகக் கருதப்படும் கருந்துளையை விண்வெளி விஞ்ஞானிகள் முதல் முறையாகப் படமெடுத்து, புதன்கிழமை வெளியிட்டனர்.
மேசியர்-87 என்ற பால்வெளி மண்டலத்தில் உள்ள எம்-87 என்றழைக்கப்படும் அந்த கருந்துளைக்கு, போவேஹி எனப் பெரிடப்பட்டுள்ளதாக தி ஹோனலுலு ஸ்டார்-அட்வர்டைஸர் நாளிதழ் தெரிவித்துள்ளது.
அலங்கரிக்கப்பட்ட, அளவிட முடியாத கரும் தோற்றம் என்று பொருள் கொண்ட அந்தப் பெயரால், ஹவாய் பல்கலைகழகப் பேராசியர் லேரி கிமூராவால் சூட்டப்பட்டுள்ளதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
பூமியின் தோற்றத்தைக் குறிப்பிடும் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமுலிபோ என்ற ஹவாய் மொழிப் பாடலில் இருந்து அந்தப் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
எம்-87 கருந்துளையைப் படம் பிடிப்பதற்கு, ஹவாய் மாகாணத்தின் இரு தொலைநோக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அந்தக் கருந்துளைக்கு ஹவாய் மொழியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது நியாயமே என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்டவெளியில், மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசையைக் கொண்ட பகுதிகளை கருந்துளைகள் என்று அழைக்கப்படுகின்றன.
அந்த ஈர்ப்பு எல்லைக்குள் செல்லும் விண்துகள்கள், ஒளி போன்ற மின்காந்த கதிர்வீச்சுகள் கூட, ஊடுருவி வெளியேற முடியாத அளவுக்கு அவற்றின் ஈர்ப்பு சக்தி மிக வீரியமாக இருந்ததால், அவற்றின் உருவம் எத்தகைய தொலைநோக்கிகள் மூலமும் பார்க்க முடியாது; எல்லைக்குள் என்ன நடக்கிறது என்பதை எந்த வித கருவியைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியாது.
எனினும், அவற்றின் ஈர்ப்பு சக்தி காரணமாக எல்லைக்கு அப்பால் நிகழும் நிகழ்வுகளைக் கொண்டு, அவற்றின் இருப்பிடம் குறித்து அறிந்து கொள்ள முடியும். உதாரணத்துக்கு, குறிப்பிட்ட பகுதியை விண்மீன்கள் சுற்றி வந்தால், அந்தப் பகுதியில் அதீத சக்தி வாய்ந்த ஈர்ப்புவிசைப் பகுதி இருப்பதைக் கண்டறியலாம்.
எனினும், அவற்றைப் பார்க்க முடியாது என்பதால் அதற்கு கருந்துளை என்று விஞ்ஞானிகள் பெயரிட்டு அழைக்கின்றனர்.
இதுவரை கருந்துளை குறித்த கற்பனைப் படங்களே வரையப்பட்டு வந்த நிலையில், பூமியிலிருந்து 5 கோடி ஒளிவருட தொலைவில் உள்ள எம்-87 கருந்துளையை விஞ்ஞானிகள் அண்மையில் முதல்முறையாக படம் பிடித்து, சாதனை படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com