நைஜீரியா: போகா ஹராமால் கடத்தப்பட்ட சிபோக் மாணவிகள் தொடர்ந்து மாயம்

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் 5 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட சிபோக் நகர பள்ளி மாணவிகள் குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் 5 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட சிபோக் நகர பள்ளி மாணவிகள் குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: நைஜீரியாவில் செயல்பட்டு வரும் போகோ ஹராம் பயங்கரவாதிகள், அந்த நாட்டின் சிபோக் நகர பள்ளியில் இருந்து 12 வயது முதல் 17 வயது வரையிலான 276 மாணவிகளை கடந்த 2014-ஆம் ஆண்டு கடத்திச் சென்றனர்.
 அவ்வாறு கடத்திச் செல்லும்போது, கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட லாரியிலிருந்து 57 மாணவிகள் குதித்துத் தப்பினர்.
 எனினும், எஞ்சிய 219 பேரை பயங்கரவாதிகள் தங்கள் மறைவிடங்களுக்கு கடத்திச் சென்றனர்.
 இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நைஜீரியத் தேர்தலில் இந்த விவகாரம் முக்கியப் பிரச்னையாக இடம் பெற்றது.
 இந்த நிலையில், போகோ ஹராம் கைதிகளை விடுவித்ததற்குப் பதிலாக சில மாணவிகளை அந்த பயங்கரவாதிகள் விடுவித்தனர். மேலும் சில மாணவிகள், போகோ ஹராம் பிடியிலிருந்து தாங்களாகவே தப்பி வந்தனர்.
 அந்த வகையில், இதுவரை 107 மாணவிகள் பயங்கரவாதிகளிடமிருந்து மீண்டு வந்துள்ளனர்.
 எனினும், 2014-ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட 276 மாணவிகளில் 112 பேரது கதி குறித்து எந்தத் தகவலும் இல்லை. இது, அந்த மாணவிகளின் குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
 போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்தும் தற்கொலைத் தாக்குதல்களில் சிறுமிகளும், பெண்களும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றனர்.
 இதன் காரணமாக, கடத்திச் செல்லப்பட்ட 112 மாணவிகள் தற்போது உயிரோடு உள்ளனரா, அல்லது தற்கொலைத் தாக்குதல், பட்டினி, நோய் போன்றவற்றால் பலியாகிவிட்டனரா என்பது கூட தெரியாமல் அந்த மாணவிகளின் உறவினர்கள் தவித்து வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com