
இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தேவாலயம், நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 7 இடங்களில் குண்டுவெடித்தது. தொடர்ந்து, எட்டாவதாக தற்கொலைத் தாக்குதலும் நிகழ்த்தப்பட்டது.
இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் சுமார் 160 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஷ்மன் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
Thoughts and prayers with Sri Lanka. Such a beautiful country.
— Rohit Sharma (@ImRo45) April 21, 2019
My heart goes out to the families who have lost their loved ones. What a dastardly act! Deeply saddened... #PrayForSrilanka pic.twitter.com/5jveaTjg8v
— Shikhar Dhawan (@SDhawan25) April 21, 2019
Shocked to hear the news coming in from Sri Lanka. My thoughts and prayers go out to everyone affected by this tragedy. #PrayForSriLanka
— Virat Kohli (@imVkohli) April 21, 2019