இலங்கையில் 13.8 கோடி பேர் பலி? டுவிட்டரில் டிரம்ப் மீண்டும் சறுக்கல்

சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் பிழையான பதிவுகளை அடிக்கடி வெளியிடும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 13.8 கோடி பேர் பலியானதாகக் குறிப்பிட்டு மீண்டும்
இலங்கையில் 13.8 கோடி பேர் பலி? டுவிட்டரில் டிரம்ப் மீண்டும் சறுக்கல்

சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் பிழையான பதிவுகளை அடிக்கடி வெளியிடும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 13.8 கோடி பேர் பலியானதாகக் குறிப்பிட்டு மீண்டும் கேலிக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
இலங்கை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதற்கு இரங்கல் தெரிவித்து டிரம்ப் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "இலங்கை தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த 13.8 கோடி பேருக்கு, அமெரிக்க மக்கள் சார்பாக எனது உண்ர்வுபூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி, பிற சுட்டுரைப் பதிவர்கள் டிரம்ப்பை விமர்சனம் செய்தனர்.
டிரம்ப்புக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா அளித்துள்ள பதிலில், "செய்தியை சரிவராமல் படிக்காமலேயே நீங்கள் செலுத்திய அஞ்சலி எப்படி உணர்வுபூர்வமானதாக இருக்க முடியும்?' என்று விமர்சித்தார்.
இலங்கையைச் சேர்ந்த மற்றொரு பயன்பாட்டாளர், "எங்கள் நாட்டில் இருப்பவர்களே 2 கோடி மக்கள்தான். டிரம்ப்பின் கூற்றுப்படி தற்போது இலங்கை மக்களே இல்லாத காலி நாடாகிவிட்டது' என்று கேலியாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மக்கள்தொகை 2.17 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, பல முறை பிழையான பதிவுகளை வெளியிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவன தலைமைச் செயலதிகாரி டிம் குக்கின் பெயரை "டிம் ஆப்பிள்' என்றும், விமானத் தயாரிப்பு நிறுவனமான லாக்கீட் மார்ட்டின் தலைமைச் செயலதிகாரி மரிலின் ஹீவ்ஸனின் பெயரை "மரிலின் லாக்கீட்' என்றும் குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் மிகுந்த கேலிக்குள்ளானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com