கொழும்பு அருகே மேலும் ஒரு குண்டு வெடிப்பு: பதற்றத்தில் மக்கள்

கொழும்பு அருகே புகோடாவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பதற்றத்தில் உள்ளனர். 
கொழும்பு அருகே மேலும் ஒரு குண்டு வெடிப்பு: பதற்றத்தில் மக்கள்


கொழும்பு அருகே புகோடாவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பதற்றத்தில் உள்ளனர். 

இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் மற்றும் குண்டுவெடிப்பில் 10 இந்தியர்கள் உள்பட 359 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அதிபர் சிறீசேனா தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. 

இதனிடையே இலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதித்து இலங்கை விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கம்பஹா உள்ள புகோடா நீதிமன்ற வளாகத்தின் பின்புறத்தில் பயங்கர சத்தத்துடன் கூடிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதுள்ளதாக ராய்ட்ட்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.  

நீதிமன்ற வளாகத்தின் பின்புறத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கை தலைநகர் கொழும்புவில் அடுத்தடுத்து அரங்கேறும் தொடர் குண்டுவெடிப்பால் இலங்கையில் பதற்றம் நிலவி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com