தங்க வாரத்தை நினைத்துக் கலங்கி நிற்கும் ஜப்பானியர்கள்: விமான நிலையங்களிலும், ஏடிஎம்களிலும் நெரிசல்

ஜப்பானில் தொடங்கவிருக்கும் தங்க வாரத்தை நினைத்து  அந்நாட்டு மக்கள் பலரும் கலங்கி நிற்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை.
தங்க வாரத்தை நினைத்துக் கலங்கி நிற்கும் ஜப்பானியர்கள்: விமான நிலையங்களிலும், ஏடிஎம்களிலும் நெரிசல்


டோக்யோ: ஜப்பானில் தொடங்கவிருக்கும் தங்க வாரத்தை நினைத்து  அந்நாட்டு மக்கள் பலரும் கலங்கி நிற்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை.

ஜப்பானில் சனிக்கிழமை தொடங்கி 10 நாட்கள் தொடர் விடுமுறை வரவுள்ளது. இது ஆண்டு தோறும் ஜப்பானில் தங்க வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தொடர் விடுமுறை காரணமாக விமான நிலையங்களிலும், ஏடிஎம் மையங்களிலும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு தினம், பசுமை தினம், குழந்தை தினம் என பல்வேறு தினங்களுக்கான விடுமுறையும், இரண்டு விடுமுறை நாட்களுக்கு நடுவில் ஒரு பணி நாள் இருந்தால் அந்நாளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்ற ஜப்பான் அரசின் விதிமுறையும் இணைந்து மே மாதம் முதல் வாரத்தை தொடர் விடுமுறை நாட்களாக மாற்றியுள்ளது.

மே 6ம் தேதி வரை வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்பதால் தேவையான பணத்தை எடுத்து வைத்துக் கொள்வதிலும், முக்கியக் கட்டணங்களை செலுத்துவதிலும் சிலர் பரபரப்பாக உள்ளனர். மற்ற நாடுகளைப் போல கிரெடிட் கார்டுகள் ஜப்பானில் அவ்வளவு புழக்கத்தில் இல்லாததும் இதற்கு ஒரு காரணம்.

வெளிநாட்டுக்கும், சொந்த ஊருக்கும் செல்லும் பயணிகளால் விமான நிலையங்கள் நிரம்பி வழிகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், எறும்பு போல எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஜப்பானியர்களால் இந்த 10 நாள் விடுமுறையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம். 45% ஜப்பானியர்கள் விடுமுறையை என்னசெய்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 35 சதவீதம் பேர் மட்டுமே மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com