சுடச்சுட

  

  'புனிதப் போர்' பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது இந்தியாவுக்கு எதிராக மிரட்டல்

  By DIN  |   Published on : 16th August 2019 11:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Jaish-e-Mohammed_held_anti-India_protests_1

   

  இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் நடத்தப்படும் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

  ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப்பிரிவு நீக்கத்துக்கு எதிராக பாகிஸ்தான் அதிக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. அது அப்பகுதி மக்களின் சுதந்திரத்துக்கு எதிரானது எனவும், தேவைப்பட்டால் இந்தியாவுடன் போரிடுவோம் என பாகிஸ்தான் பிரமதர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

  அதுமட்டுமல்லாமல், ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹுதீன், ஒருங்கிணைந்த ஜிஹாத் அமைப்பு உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளையும் இந்தியாவுக்கு எதிராக தூண்டும் செயலில் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

  இந்நிலையில், காலித் சைஃபுல்லா, நைப் அமீர், சையது சலாஹுதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாஃபர்பாத் பகுதியில் ஒன்று திரண்டு இந்தியாவுக்கு எதிராக வியாழக்கிழமை கோஷமிட்டனர். அப்போது இந்தியா மீது ஜிஹாத் (புனிதப் போர்) தொடுக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai