காஷ்மீர் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட பாக். முடிவு

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
காஷ்மீர் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட பாக். முடிவு


ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி செவ்வாய்க்கிழமை கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தை, சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வதற்காக கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியிலான அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆராய்ந்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

பாகிஸ்தான் பிரதமருக்கான தகவல் பிரிவு சிறப்பு ஆலோசகர் ஃபிர்தௌஸ் ஆஷிக் அவான் கூறுகையில், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் அடிப்படையில், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்து வருகிறார். காஷ்மீர் விவகாரத்தை, அனைத்து சர்வதேச அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் எடுத்துச் செல்லும் என்று அவர் கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com