அமேசான் காட்டுத்தீ விவகாரம்: ஜி7 அளித்த 20 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை நிராகரித்த பிரேசில்

உலகின் மிகப் பெரிய மழைக்காடான அமேசான், பூமிக்கு 20 சதவீத ஆக்ஸிஜனை அளித்து வருகிறது. இதன் காரணமாக 'பூமியின் நுரையீரல்' என்று அந்த மழைக்காடு அழைக்கப்படுகிறது. 
அமேசான் காட்டுத்தீ விவகாரம்: ஜி7 அளித்த 20 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை நிராகரித்த பிரேசில்

உலகின் மிகப் பெரிய மழைக்காடான அமேசான், பூமிக்கு 20 சதவீத ஆக்ஸிஜனை அளித்து வருகிறது. இதன் காரணமாக 'பூமியின் நுரையீரல்' என்று அந்த மழைக்காடு அழைக்கப்படுகிறது. 

உலக வெப்பமாதலைத் தடுப்பதில் இந்த மழைக்காடுகள் முக்கியத்துவம் வாய்ந்த பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அமேசான் மழைக்காடுகளின் பெரும்பகுதி பிரேசிலில் அமைந்துள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத்தீ உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

நடப்பு ஆண்டில் மட்டும் பிரேசிலில் இதுவரை 76,720 காட்டுத் தீ சம்பவங்கள் நேரிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ சம்பவங்களில் இது அதிகப்பட்ச எண்ணிக்கையாகும். 

இந்நிலையில், பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் பற்றியுள்ள தீயை அணைக்கும் பணியில் ராணுவத்தை ஈடுபடுத்த அந்த நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ உத்தரவிட்டுள்ளார். காட்டுத் தீயை அணைப்பதற்கு பிரேசில் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உலகம் முழுவதும் எதிர்ப்புக் குரல் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரேசில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஜி7 மாநாட்டில் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதியுதவியை பெற பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ மறுத்துவிட்டார். மேலும் அந்த நிதியை பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளில் உள்ள காடுகளை பாதுகாத்துக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜி7 மாநாட்டில் இந்த விவகாரத்தை எழுப்ப வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ, அமேசான் காட்டுத் தீ சம்பவங்கள் தங்களது உள்நாட்டு விவகாரம் எனவும், இதில் தலையிடுவதன் மூலம் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தனது காலனியாதிக்க மனோநிலையை வெளிப்படுத்துவதாகவும் சாடினார்.

அதையடுத்து, பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுடன் ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை முடக்கப்போவதாக மேக்ரான் எச்சரிக்கை விடுத்தார். அதன் தொடர்ச்சியாகவே, அமேசான் காட்டுத் தீயை அணைப்பதற்கு ராணுவத்தை அனுப்ப ஜெயிர் பொல்சொனாரோ உத்தரவிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com