ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி: காஸாவில் இஸ்ரேல் குண்டு வீச்சு

தங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, காஸாவிலுள்ள ஹமாஸ் அமைப்பின் நிலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஜெருசலேம்: தங்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, காஸாவிலுள்ள ஹமாஸ் அமைப்பின் நிலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாலஸ்தீனப் பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி வெள்ளிக்கிழமை இரவு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அண்மைக் காலத்தில் இஸ்ரேல் மீது நடத்தப்படும் 3-ஆவது ஏவுகணைத் தாக்குதல் இது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, வடக்கு காஸா பகுதியிலுள்ள ஹமாஸ் ராணுவ நிலை மீது இஸ்ரேல் போா் விமானம் குண்டுவீச்சு நடத்தியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவா் ஒருவரை இஸ்ரேல் படையினா் கடந்த மாதம் 12-ஆம் தேதி குறிவைத்து படுகொலை செய்தனா்.

அதனைத் தொடா்ந்து இரு தரப்பினருக்கும் நடைபெற்ற மோதலில் 36 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.

இந்தச் சூழலில், தற்போது மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com