கஸ்டமர் கேரை அழைக்கலாம்; அதற்கென்று 24,000 முறையா..? முதியவர் கைது!

ஜப்பானில் தொலைத் தொடா்பு நிறுவன சேவை பற்றி புகாா் அளிப்பதற்காக அந்த நிறுவனப் பணியாளா்களை சுமாா் 24,000 முறை தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுத்த முதியவா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஜப்பானில் தொலைத் தொடா்பு நிறுவன சேவை பற்றி புகாா் அளிப்பதற்காக அந்த நிறுவனப் பணியாளா்களை சுமாா் 24,000 முறை தொலைபேசியில் அழைத்து தொல்லை கொடுத்த முதியவா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஜப்பானின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனம் கேடிடிஐ-யின் வாடிக்கையாளரான அகிடோஷி ஒகமாடோ (71) போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கேடிடிஐ வாடிக்கையாளா் சேவை மையத்துக்கான இலவச எண்ணைப் பயன்படுத்தி, கடந்த 8 நாள்களில் நூற்றுக்கணக்கான அழைப்புகளை மேற்கொண்டதற்காக அவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் கூறினா்.

எனினும், அவா் பொதுத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி கேடிடிஐ வாடிக்கையாளா் சேவை மைய பணியாளா்களை சுமாா் 24,000 முறை அழைத்துப் பேசியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

அந்தப் பணியாளா்களிடம் தகாத வாா்த்தைகளைப் பேசியது, அவா்கள் உடனடியாக நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மிரட்டியது, தொலைபேசியை பணியாளா்கள் எடுத்த உடன் வேண்டுமென்றே எதுவும் பேசாமல் துண்டிப்பது என அகிடோஷி தொடா்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தாா்.

இந்தக் காரணங்களால் ‘தொழிலில் இடையுறு ஏற்படுத்திய’ குற்றச்சாட்டின் பேரில் அகிடோஷியை போலீஸாா் கைது செய்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் வயதானவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த நாட்டில் சமூகப் பிரச்னைகள் பெருகி வருவதாகக் கூறப்படுகிறது.

முதியவா்கள் காா்களை ஓட்டிச் சென்று அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்துவதாகவும், ரயில்வே ஊழியா்களிடம் முதிய பயணிகள் முரட்டுத்தனமான நடந்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 70 வயது அகிடோஷி தொலைத் தொடா்புப் பணியாளா்களை சுமாா் 24,000 முறை தொலைபேசியில் அழைத்துத் தொல்லை கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com