நிருபரின் செல்லிடப்பேசியைப் பிடுங்கிய பிரிட்டன் பிரதமரால் சர்ச்சை

டிச. 12-ஆம் தேதி அந்நாட்டின் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிருபரின் செல்லிடப்பேசியைப் பிடுங்கிய பிரிட்டன் பிரதமரால் சர்ச்சை

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நிருபரின் செல்லிடப்பேசியைப் பிடுங்கி தனது சட்டைப் பையில் வைத்ததாக கடுமையாக திங்கள்கிழமை விமர்சிக்கப்பட்டார்.

டிச. 12-ஆம் தேதி அந்நாட்டின் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத்துறை சேவை அமைப்பு தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பின் போது, லீட்ஸ் மருத்துவமனையின் தரையில், ஆடைக் குவியலின் மத்தியில் நிமோனியா பாதிப்பால் உடல்நலக் குறைவு ஏற்பட்ட 4 வயது சிறுவன் படுத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை, அங்கிருந்த ஐடிவி ஊடகத்தின் நிருபர் ஜோ பைக், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.

அப்போது அவரது செல்லிடப்பேசியை திடீரெனப் பிடுங்கிக்கொண்ட போரிஸ், அதனை தனது சட்டைப் பையில் வைத்துக்கொண்டார்.

இந்த சம்பவத்தின் விடியோவை பின்னர் அந்த நிருபர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை சுமார் 1 மில்லியன் மக்கள் வரை பார்த்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com