சாம்சங் தொழிற்சாலை மூடப்பட்டதால் சீன நகரம் பேய்நகரமாக மாறியது

சாம்சங் தொழிற்சாலை மூடப்பட்டதால், வட சீனாவில் பேர்ல் நதி பாயும் ஹாய்ஷு நகரமே இன்று பேய் நகரம் போல மாறிவிட்டிருக்கிறது.
சாம்சங் தொழிற்சாலை மூடப்பட்டதால் சீன நகரம் பேய்நகரமாக மாறியது


பெய்ஜிங்: சாம்சங் தொழிற்சாலை மூடப்பட்டதால், வட சீனாவில் பேர்ல் நதி பாயும் ஹாய்ஷு நகரமே இன்று பேய் நகரம் போல மாறிவிட்டிருக்கிறது.

ஹாய்ஷு நகரில் இயங்கி வந்த சுமார் 30 ஆண்டுகள் பழமையான சாம்சங் தயாரிப்பு நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதம் மூடி, அதனை இந்தியா மற்றும் வியட்நாமுக்கு மாற்றிவிட்டது. 

இதன் எதிரொலியாக, சீனாவில் இருந்த கடைசி சாம்சங் தொழிற்சாலையும் மூடப்பட்டு, இதுவரை மிக பரபரப்பாக இயங்கி வந்த நகரமே இன்று பேய் நகரம் போல ஆள் அறவமற்றுக் காட்சியளிக்கிறது.

சாம்சங் தனது ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு தொழிற்சாலையை மூடியதன் மூலம், அந்த தொழிற்சாலையின் சுற்றுவட்டாரத்தில் இயங்கி வந்த 60% சிறுசிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன.

இந்த தொழிற்சாலையை மையமாகக் கொண்டே அங்கு ஏராளமான சிறுசிறு நிறுவனங்கள், உணவகங்கள் என இயங்கி வந்தன. தற்போது, மிகப் பிரம்மாண்டமாக இயங்கி வந்த சாம்சங் தொழிற்சாலை மூடப்பட்டதால், அதில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அந்நகரை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால், உணவகங்கள் முதல் சிறுசிறு கடைகள் என இதுவரை 60% தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால், ஆள் நடமாட்டமே இல்லாமல் தெருக்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com