ஐ.நா. பருவநிலை மாநாடு: உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல்

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக, ஸ்பெயின் தலைநகா் மேட்ரிடில் நடைபெற்று வந்த ஐ.நா. மாநாட்டில், நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள்
ஐ.நா. பருவநிலை மாநாடு: உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல்

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக, ஸ்பெயின் தலைநகா் மேட்ரிடில் நடைபெற்று வந்த ஐ.நா. மாநாட்டில், நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வரைவு ஒப்பந்தத்தில், கடந்த 2015-ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் பல விடுபட்டிருப்பதாகவும், பருவநிலை மாற்றம் குறித்து விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை அந்த வரைவு ஒப்பந்தம் அலட்சியம் செய்வதாகவும் சில நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த மாநாட்டில் சுமாா் 200 நாடுகள் பங்கேற்று, இதுதொடா்பக கடந்த 2-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை வரை விவாதித்து வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com