பிரான்ஸிடம் 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குகிறது ஆஸ்திரேலியா!

ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ளது.
பிரான்ஸிடம் 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குகிறது ஆஸ்திரேலியா!


ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடியாகும்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போட்டிபோட்டு வருகின்றன. இந்நிலையில், தனது ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் நோக்கில், பிரான்ஸ் நாட்டின் நிறுவனத்திடம் ஆஸ்திரேலியா இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, போர்க் காலத்தில் எதிர்த்துத் தாக்கும் திறன் வாய்ந்த 12 நீர்மூழ்கிக் கப்பல்களை அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது.
முதல் நீர்மூழ்கிக் கப்பல் வரும் 2030-ஆம் ஆண்டு வாக்கில், ஆஸ்திரேலியா நாட்டிடம் ஒப்படைக்கப்பட உள்ளது; கடைசி நீர்மூழ்கிக் கப்பல் வரும் 2040-ஆம் ஆண்டு வாக்கில் அளிக்கப்பட உள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்களின் ஆயுள்காலம் சுமார் 40 ஆண்டுகள் என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் மேலும் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், பாதுகாப்புத் துறையில் மிகப் பெரிய அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது அரசின் துணிச்சல் மிக்க முடிவு என்றார். ஆஸ்திரேலியா மேற்கொள்ளும் மிகப்பெரிய ராணுவக் கொள்முதல் ஒப்பந்தம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com