பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு பேட்டரி பாகங்கள் தயாரிக்கும் முறை: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு, ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய பேட்டரிகளின் பாகங்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க


தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு, ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய பேட்டரிகளின் பாகங்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பிளாஸ்டிக் பைகளில் உள்ள பாலித்தீனை மிகக் குறைந்த செலவில் மின்சாரத்தைத் தேக்கி வைக்கக்கூடிய கார்பனாக மாற்றும் வழிமுறையை அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பிளாஸ்டிக் கழிவிலிருந்து பேட்டரிகளுக்கான கார்பனை உருவாக்கும் முறை இதுவரை மிகவும் செலவு மிக்கதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் இருந்து வந்தது.
இந்த நிலையில், அத்தகைய கார்பனை உருவாக்க மிகவும் எளிமையான, செலவு குறைவான வழிமுறையை உருவாக்க விரும்பினோம்.
அதற்காக, பாலித்தீன் பைகளை சல்ஃப்யூரிக் அமிலத்தில் மூழ்கவைத்து, அதனை அழுத்தம் நிறைந்த உலையில் சூடுபடுத்தினோம். பாலித்தீனின் உருகு நிலைக்கு சற்று குறைவாக அந்த உலையில் வெப்பமூட்டப்பட்டது. இந்த முறையால், சல்ஃபோனிக் அமிலப் பொருள்கள் பாலித்தீனில் உள்ள  கார்பன் மூலப் பொருள்களுடன் இணைந்துகொண்டன. அதையடுத்து, சல்ஃபோனேற்றம் செய்யப்பட்ட அந்த பாலித்தீனில் இருந்து சுத்தமான கார்பன் தயாரிக்கப்பட்டது. அந்த கார்பனை பேட்டரிகளின் பாகங்களாகப் பயன்படுத்தி பரிசோதித்தபோது, சந்தையில் விற்கப்படும் பேட்டரிகளைப் போலவே அதன் செயல்திறன் இருந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com