நேபாளத்தை மீண்டும்  ஹிந்து நாடாக அறிவிக்க கோரிக்கை

நேபாளத்தை மீண்டும் ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் வலதுசாரி அமைப்பான ராஷ்ட்ரீய பிரஜாதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.


நேபாளத்தை மீண்டும் ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் வலதுசாரி அமைப்பான ராஷ்ட்ரீய பிரஜாதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரதமர் கே.பி. ஒலியிடம் அந்தக் கட்சியின் தலைவர் கமல் தாபா அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
2009-ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்தது போல் நேபாளத்தை ஹிந்து நாடாக மீண்டும் அறிவிக்க வேண்டும்.
மேலும், நாட்டில் கூட்டாட்சி முறை தொடர வேண்டுமா என்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நேபாளம், அதிகாரப்பூர்வமான உலகின் ஒரே ஹிந்து நாடாக இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் இயக்கத்தின் விளைவாக அந்த நாட்டில் மன்னராட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அரசியல் சாசனத்தில் மதச்சார்பற்ற நாடு என்ற பிரிவு சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹிந்து நாடு என்ற அந்தஸ்தை நேபாளம் இழந்தது.
இந்தச் சூழலில், பிரதமரிடம் கமல் தாபா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com