Enable Javscript for better performance
2020-ல் நான் தான் அமெரிக்க அதிபர் வேட்பாளர்: சொல்கிறார் இந்திய வம்சாவளிப் பெண்- Dinamani

சுடச்சுட

    

    2020-ல் நான் தான் அமெரிக்க அதிபர் வேட்பாளர்: சொல்கிறார் இந்திய வம்சாவளிப் பெண்

    By DIN  |   Published on : 12th January 2019 01:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Tulsi_Gabbard

     

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துல்ஸி கப்பார்டு என்பவர் 2020-ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் துல்ஸி கப்பார்டு (37). இவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

    வருகிற 2020-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இதுகுறித்து அடுத்த வாரத்துக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளேன். போர் மற்றும் அமைதி தான் எனது முக்கிய நோக்கங்களாகும். அதுதொடர்பாகவே எனது பிரசாரங்களும் அமையும் என்றார்.

    இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிந்து மற்றும் அமெரிக்க சமோவன் வம்சாவளி ஆகியவற்ற தனது பூர்விகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai