பிரக்ஸிட்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு தோல்வி

பிரக்ஸிட் அமல்படுத்துவது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மேயின் தரப்பு தோல்வி அடைந்தது.

பிரக்ஸிட் அமல்படுத்துவது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மேயின் தரப்பு தோல்வி அடைந்தது.

இது தொடர்பாக  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 432 உறுப்பினர்கள் பிரக்ஸிட்டுக்கு எதிராகவும் ,202 உறுப்பினர்கள் பிரக்ஸிட்டுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை வரும் மார்ச் 29-ஆம் தேதிகுள் முடிவு செய்யவேண்டும் என்ற நிலையில்    பிரதமர் தெரசா மேயின் தரப்பு படுதோல்வி அடைந்தது.

ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.
ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தில் செயல்படும் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ளதால், பிரிட்டன் தனது தனித்துவத்தையும், இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு சாரார் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் பிரதமர் தெரசா மே பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் வெளியேற்றத்துக்குப் பிறகு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த வரைவு ஒப்பந்தத்தை வெளியிட்டார்.
அந்த ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து,  6 அமைச்சர்கள் பதவி விலகினர்என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com