நீங்கள் நினைப்பது போல வாட்ஸ்அப் ஒன்றும் அவ்வளவு மோசமில்லையாம்! ஆய்வு சொல்கிறது!!

எப்போது பார்த்தாலும் வாட்ஸ்அப்பையே பார்த்துக் கொண்டிருக்கிறார்களே.. இது எங்கேப் போய் முடியுமோ என்று வீட்டில் இருக்கும் அம்மா அப்பாக்கள் புலம்புவது கேட்கிறது.
நீங்கள் நினைப்பது போல வாட்ஸ்அப் ஒன்றும் அவ்வளவு மோசமில்லையாம்! ஆய்வு சொல்கிறது!!

எப்போது பார்த்தாலும் வாட்ஸ்அப்பையே பார்த்துக் கொண்டிருக்கிறார்களே.. இது எங்கேப் போய் முடியுமோ என்று வீட்டில் இருக்கும் அம்மா அப்பாக்கள் புலம்புவது கேட்கிறது.

சில வீடுகளில் அம்மாவும், அப்பாவுமே வாட்ஸ்அப்பில் மெய்மறந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்கிறது ஆய்வு ஒன்று.

அதாவது, சதா சர்வ காலமும் வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்களில் நேரத்தை செலவிடுவதால், ஒருவர் சீரான மனநலத்துடன் இருக்க வழிவகை செய்கிறது என்கிறது அந்த ஆய்வு.

இந்த ஆய்வுக் கட்டுரை சர்வதேச ஜர்னல் ஆஃப் ஹியூமன் கம்ப்யூட்டர் ஸ்டடிஸ் இதழில் வெளியாகியுள்ளது.

எழுத்துக்களைக் அடிப்படையாக வைத்து செயல்படும் வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்களால், ஒருவரின் மனநலம் ஆரோக்கியமாக அமைவதாகக் கூறுகிறது.

ஒவ்வொரு நாளும், ஒருவர் கணிசமான நேரத்தை வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் செலவிடும்போது, அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் நாம் நினைக்கும் அளவுக்கு அது மோசமானதல்ல, ஏன் என்றால், ஒருவர் தான் தனிமையாக இருப்பதாக உணர்வதை விட, நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் வாட்ஸ்அப்பில் நேரத்தை செலவிட்டு, தனக்காக ஒரு சிலர் இருக்கிறார்கள் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது, அவர்களது மனநிலையை ஆரோக்கியமாக வைக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சமூகத்துடனான நெருங்கிய நட்பு அல்லது உறவு வாட்ஸ்அப் போன்ற செயலிகளால் அதிகரிப்பதாகவே கூறப்படுகிறது.  மனிதர்களை தனித்தனி சமூகமாக பிரித்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் இந்த சமூக தளங்கள்தான், தற்போது இருக்கும் கொஞ்ச நஞ்ச உறவுகளையும் பிணைப்போடு வைத்திருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com