அமெரிக்கா: ஜோ பிடன் வருமானம் பல மடங்கு அதிகரிப்பு

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனின் வருமானம், கடந்த 2 ஆண்டுகளில் 1.5 கோடி டாலர்களாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்கா: ஜோ பிடன் வருமானம் பல மடங்கு அதிகரிப்பு


அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனின் வருமானம், கடந்த 2 ஆண்டுகளில் 1.5 கோடி டாலர்களாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில்,  அதிபர் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு தயாராகி வருவோரின் பட்டியலில் ஜோ பிடனும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில், அவர் தனது வருமான வரி கணக்கு விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 2017-ஆம் ஆண்டில் ஜோ பிடனின் பதவிக் காலம் முடிவுக்கு வந்த காலக்கட்டத்தில் அவருடைய வருமானம்  40 லட்சம் டாலர்களாக இருந்தது. அதற்கு அடுத்த ஆண்டில் மட்டும், அவரது வருமானம் 110 லட்சம் டாலர்கள் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரது வருமானம் 150 லட்சம் டாலர்களாக அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது வருவாய் விவரங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மற்றொரு வேட்பாளர் கமலா ஹாரிஸின் வருமானம் 18 லட்சம் டாலர்களாக உள்ளது.
எனினும், கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டபோது, பாரம்பரிய வழக்கத்துக்கு மாறாக, தனது வருமானம் பற்றிய விவரத்தை வெளியிட மறுத்துவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com