சீனாவுக்கு எதிர்ப்பு: ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம்

சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் சனிக்கிழமை மீண்டும் போராட்டம் நடைபெற்றது.
சீனாவுக்கு எதிர்ப்பு: ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம்

சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் சனிக்கிழமை மீண்டும் போராட்டம் நடைபெற்றது.
 சீனாவிலிருந்து வந்து வர்த்தகம் மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடைபெற்ற அந்தப் போராட்டத்தில், போலீஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
 ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீன பெருநிலப் பகுதிக்கு நாடு கடத்த வகை செய்யும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் தீவிர போராட்டம் நடைபெற்று வந்தது.
 இந்த நிலையில், சீன வர்த்தகர்களுக்கு எதிராக அந்த நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 சீனாவிலிருந்து ஏராளமானோர் ஹாங்காங் வந்து போட்டி வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், இதன் காரணமாக அந்த நகரைச் சேர்ந்த சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
 மேலும், சீன வர்த்தகர்கள் வருகையால் ஹாங்காங்கில் இட வாடகை உயர்ந்துவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.
 இந்தப் போராட்டம் நடைபெற்ற ஷெயுங் ஷுய் பகுதியில் கடைகள் மூடப்பட்டிருந்தன. போராட்டத்தின்போது போலீஸாருடன் ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com