வங்கதேச முன்னாள் அதிபர் அர்ஷத் மரணம்

வங்கேதச முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஹுசைன் முகமது அர்ஷத் (91), உடல் நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.
வங்கதேச முன்னாள் அதிபர் அர்ஷத் மரணம்

வங்கேதச முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஹுசைன் முகமது அர்ஷத் (91), உடல் நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.
 ராணுவ தலைமைத் தளபதியாக இருந்து கடந்த 1982-ஆம் ஆண்டில் ராணுவப் புரட்சியின் மூலம் அவர் ஆட்சியைக் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து, 1986-ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து அதிபராகப் பொறுப்பேற்றார்.
 எனினும், மக்கள் போராட்டம் காரணமாக 8 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு அவர் விலகினார்.
 சர்வாதிகார ஆட்சி நடத்தியிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் முகமது அர்ஷத் மென்மையான சுபாவம் கொண்டவர் எனவும், கவிதைகள் புனைவதில் அவர் வல்லவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com