ஆப்கானிஸ்தான்: தலிபான் பிணைக் கைதிகள் 34 பேர் விடுவிப்பு

ஆப்கானிஸ்தானின் வடக்கு பக்லான் மாகாணத்தில் தலிபான்களிடம் பிணைக் கைதிகளாக இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் 17 பேர் உள்பட 34 பேரை
மீட்கப்பட்ட பிணைக்கைதிகளுடன் ஆப்கன் பாதுகாப்புப் படையினர்.
மீட்கப்பட்ட பிணைக்கைதிகளுடன் ஆப்கன் பாதுகாப்புப் படையினர்.

ஆப்கானிஸ்தானின் வடக்கு பக்லான் மாகாணத்தில் தலிபான்களிடம் பிணைக் கைதிகளாக இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் 17 பேர் உள்பட 34 பேரை அந்நாட்டு சிறப்பு படையினர் மீட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாக்லான் மாகாணத்தில் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 7 ராணுவ வீரர்கள், 7 போலீஸார், 3 உளவுத் துறை அதிகாரிகள் உள்பட  34 பேர், சிறப்பு படையினரால் விடுவிக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது என்று  கூறப்பட்டுள்ளது. 
இந்த நடவடிக்கை குறித்து தலிபான்கள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னர், கடந்த ஏப்ரல் மாதத்தில் தெற்கு உருஸ்கான் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் உள்பட 53 பேர் மீட்கப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை கடந்த சில ஆண்டுகளாக கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் வைத்துள்ளனர். கடந்த 17 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு ஆதரவுப் படையினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமன்றி  பாதுகாப்பு படையினர் மீது தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வப்போது, பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் ஆகியோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்று விடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com