சுடச்சுட

  

  என்ன, ஒரு வாரத்துக்கு தோராயமாக 5 கிராம் பிளாஸ்டிக்கை சாப்பிடுகிறோமா?

  By ENS  |   Published on : 13th June 2019 02:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  say_no_to_plastics


  மெல்போர்ன்: ஒரு மனிதன் ஒரு வாரத்துக்கு தோராயமாக 5 கிராம் பிளாஸ்டிக்கை சாப்பிடுகிறான் என்கிறது ஒரு பகீர் ஆய்வு.

  5 கிராம் என்றால் எவ்வளவு இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? நம் கையில் இருக்கும் ஒரு ஏடிஎம் அல்லது கிரெடிட் அட்டையின் எடைதான் 5 கிராம்.

  யூனிவர்சிட்டி ஆஃப் நியூகாஸ்டில் இன் ஆஸ்திரேலியா நடத்திய ஆய்வில், ஒரு மனிதன் ஒவ்வொரு வாரமும் சுமார் 2000 பிளாஸ்டிக் துகள்களை சாப்பிடுகிறான். இதுவே ஒரு மாதத்துக்கு 21 கிராம் அளவுக்கும், ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 250 கிராம் அளவுக்கும் இருக்குமாம்.

  இது உலகின் பல்வேறு நாடுகளின் சுகாதார அமைப்புகளையும் தட்டி எழுப்புவதாக உள்ளது. அதாவது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி தூக்கி எறிவதால் சுற்றுச் சூழல் மட்டுமல்ல, நமது உடல் ஆரோக்கியமும் கூட பாதிக்கப்படுகிறது என்பதையே இந்த ஆய்வு உணர்த்துகிறது. ஆனால் அதே சமயம், பிளாஸ்டிக்கை உண்பதில் இருந்து மனிதர்கள் தப்பிக்கவே முடியாது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

  இந்த ஆய்வில், பிளாஸ்டிக்கை உட்கொள்வதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கிறது. இதனைத் தவிர்க்க வேண்டும் என்றால், பிளாஸ்டிக் எனப்படும் அடிப்படை விஷயத்தையே தவிர்க்க வேண்டும்.

  பிளாஸ்டிக் என்பது குடிநீர், குடிநீர் பாட்டில், குழாயில் வரும் தண்ணீர் என பலவற்றில் கலந்திருப்பதால், பிளாஸ்டிக் உடலுக்குள் சேர்வதை தவிர்க்க முடியாத நிலையில் இருப்பதாகவும், ஐரோப்பா மற்றும் இந்தோனேசிய கடல்பகுதிகளை விடவும் அமெரிக்கா மற்றும் இந்திய கடல்பகுதிகளில் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai