வட கொரிய அதிபருக்கு டிரம்ப் மீண்டும் கடிதம்

வட கொரியாவுடனான அணுசக்திப் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையிலும், அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட கொரிய அதிபருக்கு டிரம்ப் மீண்டும் கடிதம்

வட கொரியாவுடனான அணுசக்திப் பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையிலும், அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வட கொரிய அரசுக்குச் சொந்தமான கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் மிகச் சிறந்த வாசகங்களைக் கொண்டிருந்ததாக அதிபர் கிம் திருப்தியுடன் தெரிவித்தார். அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதன் மூலம் அதிபர் டிரம்ப் வெளிக்காட்டியுள்ள அரசியல் நிபுணத்துவத்தையும், அசாதாரண துணிச்சலையும் அதிபர் கிம் வெகுவாகப் பாராட்டினார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள சுவையான கருத்துகள் குறித்து ஆழ்ந்து சிந்திக்கப்போவதாகவும் அவர் கூறினார் என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தென் கொரிய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அதிபர்கள் டொனால்ட் டிரம்ப்புக்கும், கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே கடிதப் போக்குவரத்து தொடர்வது, அணுசக்திப் பேச்சுவார்த்தையை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. தடையையும் மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வந்த வட கொரியா, தனது அணு ஆயுதங்களைக் கைவிடத் தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, டிரம்ப், கிம் ஜோங்-உன் ஆகியோர் சிங்கப்பூரிலும், மியாமன்மரிலும் இரு முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாகத் தளர்த்த டிரம்ப் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டதால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இந்தச் சூழலில், கிம் ஜோங்-உன்னுக்கு டிரம்ப் கடிதம் எழுதியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com