எலிகளுக்கு இருளில் பார்க்கும் திறன்: விஞ்ஞானிகள் சாதனை

இருளில் பார்க்கும் திறனை எலிகளுக்கு அளித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
எலிகளுக்கு இருளில் பார்க்கும் திறன்: விஞ்ஞானிகள் சாதனை

இருளில் பார்க்கும் திறனை எலிகளுக்கு அளித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவின் "செல்' அறிவியல் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது:

மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கண்களுக்கு ஒரு குறிப்பிட்ட அலை நீளம் கொண்ட ஒளிக் கதிர்கள் மட்டுமே புலப்படும்.

நம்மைச் சுற்றி அகச் சிவப்புக் கதிர்கள் நிறைந்திருந்தாலும், அவற்றின் அலை நீளம் அதிகம் என்பதால் அவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

வெப்பத்தை வெளியிடுவதால் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடல்களிலிருந்தும், பொருள்களின் மேற்பரப்பில் இருந்தும் இருளில் கூட அகச் சிவப்பு கதிர்கள் வெளியாகும்.  இருந்தாலும் அவை நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

இந்த நிலையில், எலியின் கண்களில் "நானோ பார்ட்டிக்கல்ஸ்' எனப்படும் நுண்பொருள்களை செலுத்தி, அகச் சிவப்பு கதிர் போன்ற அலை நீளம் அதிகம் கொண்ட ஒளிக் கதிர்களையும் பார்க்கும் திறனை அளிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

அதில், சோதனைக்குள்படுத்தப்பட்ட எலியால் 10 வாரங்கள் வரை அகச் சிவப்பு கதிர்களை அடையாளம் காண முடிந்தது. 

இந்தப் பரிசோதனையின் வெற்றியின் மூலம், இருளில் பார்க்கும் திறனை மனிதர்களுக்கும் அளிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், அது ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு வரப்பிரசாதமாக அமையக் கூடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com