வரி விதிப்பு: இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

""அதிக வரிகளை விதிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது; இதற்குப் பதிலடியாக, இந்தியத் தயாரிப்பு பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்க போகிறேன்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வரி விதிப்பு: இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

""அதிக வரிகளை விதிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது; இதற்குப் பதிலடியாக, இந்தியத் தயாரிப்பு பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்க போகிறேன்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வாஷிங்டன் டி.சி. நகர் அருகே உள்ள மேரிலாந்து பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், அவர் பேசியதாவது:
அதிக வரிகளை விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. அமெரிக்க தயாரிப்பு மோட்டார் சைக்கிள் ஒன்று, இந்தியாவுக்கு அனுப்பப்பட்டால், அதன் மீது இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. அதேநேரத்தில், இந்தியத் தயாரிப்பு மோட்டார் சைக்கிள், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டால், அதன் மீது எந்த வரியும் விதிக்கப்படுவதில்லை.
இதனால் இந்தியாவின் வரி விதிப்புக்கு பதிலடியாக அந்நாட்டு தயாரிப்பு பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்க விரும்புகிறேன். இதற்காக இந்தியாவைப் போல 100 சதவீத வரி விதிக்க போகிறேன் என்று பொருள் கொள்ளக் கூடாது. 25 சதவீத வரி விதிக்க இருக்கிறேன்.
எனது நடவடிக்கைக்கு செனட் சபையில் முட்டுக்கட்டை போடப்படும். 100 சதவீத வரிக்கு பதிலடியாக 100 சதவீத வரிதான் விதிக்கப்பட வேண்டும். ஆனால் நானோ 25 சதவீத வரிதான் விதிக்க இருக்கிறேன். இது முட்டாள்தனமாக இருக்கலாம். செனட் சபையின் ஆதரவை பெறுவதற்காகத்தான் நான் 25 சதவீத வரியை விதிக்க இருக்கிறேன்.
இந்தியாவை உதாரணமாகத்தான் குறிப்பிட்டேன். இதுபோல, பல்வேறு நாடுகளும் அமெரிக்க பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கின்றன. அமெரிக்க தயாரிப்பு பொருள்கள் மீது 100 சதவீத வரி விதிக்கும் நாடுகள், அதே பொருள்
களை அமெரிக்காவுக்கு எந்த வரியும் இல்லாமல் ஏற்றுமதி செய்கின்றன. அந்நாடுகள் அமெரிக்காவை மதிப்பதில்லை. அமெரிக்காவை முட்டாள் என்று நினைக்கின்றன என்றார் டிரம்ப்.
இதற்கு முன்பும், இந்தியா அதிக வரி விதிப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். இருப்பினும் தனது நிலைப்பாட்டை பின்னர் அவர் மாற்றினார். வெள்ளை மாளிகையில் இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்ப் பேசுகையில், " ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் மீதான வரியை 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளது; இது திருப்தி அளிக்கிறது.
இது போதாதுதான். இருப்பினும் இதை ஏற்கிறேன்' என்றார். இந்த சூழ்நிலையில், இந்தியப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com