ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையின் மூலம் எச்ஐவி பாதிப்பில் இருந்து மீண்ட 2ம் நபர்

ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையின் மூலம் பெர்லினைச் சேர்ந்த எச்ஐவி பாதித்த நபர் அந்நோயில் இருந்து முற்றிலும் விடுபட்டிருக்கும் 2வது மனிதராக  மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டிமோதி ரெய் ப்ரவுன் என்பவருக்கு ஜெர்மனியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை  செய்யப்பட்டு தற்போது வரை எச்ஐவி தொற்று இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

அது முதல் ப்ரவுன் ஒருவர் மட்டுமே எச்ஐவி பாதித்து அதில் இருந்து முற்றிலும் விடுபட்ட ஒரே மனிதராக அறியப்பட்டு வந்தார்.

இந்த ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை என்பது மிகவும் அபாயத்துக்குரிய சிகிச்சையாகவும், பல நோயாளிகளுக்கு செய்து தோல்வி அடைந்த முறையாகவும் இருக்கிறது.

தற்போது இரண்டாவது நோயாளிக்கு இந்த சிகிச்சை முறை பலனளித்திருக்கிறது. எனினும் அவரது அடையாளம் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் எச்ஐவி க்கு மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கருத முடியாது. எனினும், அதனை ஒழிக்க ஒரு பாதை இருக்கிறது. அதை வெற்றிப்பாதையாக மாற்ற இன்னும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்பதே இதன் மூலம் தெரிய வரும் செய்தியாகும்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com