அதிபர் தேர்தலில் போட்டியில்லை: ஹிலாரி கிளிண்டன்

2020-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அந்நாட்டு முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியில்லை: ஹிலாரி கிளிண்டன்

2020-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அந்நாட்டு முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர்  பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி கிளிண்டன், கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். எனினும், அந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பிடம் அவர் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில், வரும் 2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று ஹிலாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நான் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. எனினும் நான் யாரை நம்புகிறேனோ அவர்களுக்கு ஆதரவாக என்றும் குரல் கொடுப்பேன். அதற்காக பணியாற்றுவேன். நான் என்ன கூற நினைக்கிறேன் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நமது நாடு மிகவும் ஆபத்தான சூழலில் உள்ளது. நமது நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் என்னை மிகவும் துன்புறுத்துகின்றன. 
இப்போதைய நிர்வாகத்தில் உள்ள தவறுகளை எடுத்துரைக்க வேண்டிய அவசியம் உள்ளது. மக்களிடம் எடுத்து கூறுவதற்கு பல பிரச்னைகள் இருக்கின்றன. 
எனினும் எதை குறித்தும் தவறாக கூறி விடக் கூடாது என்று ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்களிடம் தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.
வேறு ஏதேனும் அரசு பதவியில் போட்டியிட விருப்பம் உள்ளதா? என்ற கேள்விக்கு, "அது மாதிரியான எண்ணம் இல்லை. ஆனால் எனக்கு நியூயார்க்கில் வாழ்வதற்கு மிகவும் பிடிக்கும். 8 ஆண்டுகள் நியூயார்க் மாகாண மக்களுக்காக பணியாற்றியதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com