கர்தார்பூர் விவகாரம்: அமெரிக்கவாழ் சீக்கியர்கள் வலியுறுத்தல்

பாகிஸ்தானில் கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் விவகாரத்தில் இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்று அமெரிக்காவில் வசித்துவரும் சீக்கியர்கள் தெரிவித்தனர்.


பாகிஸ்தானில் கர்தார்பூர் வழித்தடம் அமைக்கும் விவகாரத்தில் இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்று அமெரிக்காவில் வசித்துவரும் சீக்கியர்கள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி, சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வேனில் பயங்கரவாதி தற்கொலை தாக்குதல் நிகழ்த்தியதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலாகோட் பகுதியில் பிப்ரவரி 26ஆம் தேதி இந்திய விமானப் படை அதிரடித் தாக்குதல் நடத்தியது.
இதனால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் வசித்துவரும் சீக்கியர்கள், அந்நாட்டுத் தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்களையும் சீக்கியர்கள் குழு சந்தித்து, இந்தியா-பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமைதியான சூழல் நிலவ நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தது.
ஒருங்கிணைந்த சீக்கிய குழுவின் நிறுவனர் ராஷ்பல் சிங்கர் தின்ட்ஸா கூறுகையில், பாகிஸ்தான் எல்லையில் உள்ள கர்தார்பூர் குருத்வாராவுக்கு வழித்தடம் அமைக்கும் முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டு வரும் நிலையில், பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து ஏற்பட்ட பதற்றத்தால் அந்தப் பணிகளில் வேகம் குறைந்துவிடக் கூடாது. இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகளைத் தீர்க்க அமெரிக்க பாடுபட வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com