இந்தோனேஷியாவில் மழை வெள்ளம்: 50 பேர் பலி

இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 50 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேஷியாவில் மழை வெள்ளம்: 50 பேர் பலி

இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 50 பேர் உயிரிழந்தனர்.
 இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவர் சுடோபோ பூர்வோ நுக்ரோஹோ ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
 பப்புவா மாகாணத் தலைநகர் ஜெயபுராவுக்கு அருகே உள்ள சென்டானி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அங்கு சனிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் மழையால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
 இதில் 50 பேர் உயிரிழந்தனர்; 59 பேர் காயமடைந்தனர். வெள்ளத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
 தற்போது வெள்ளம் வடியத் தொடங்கினாலும், ஆபத்தான பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
 மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும், பாதிக்கப்பட்ட எல்லா பகுதிகளுக்கும் மீட்புக் குழுவினரால் இதுவரை செல்ல முடியவில்லை. எனவே, மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என்றார் அவர்.
 இந்தோனேஷியாவில் அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான மழைக் காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும்.
 கடந்த ஜனவரி மாதம் இந்தோனேஷியாவின் சுலாவெசி தீவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 70 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com