கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

சூரிய சக்தியைப் பயன்படுத்தி கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளைத் தயாரிக்கும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள, சூரிய சக்தி மூலம் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள் உருவாக்கும் மாதிரி கருவி.
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள, சூரிய சக்தி மூலம் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள் உருவாக்கும் மாதிரி கருவி.


சூரிய சக்தியைப் பயன்படுத்தி கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளைத் தயாரிக்கும் முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம், காற்றில் மாசுபாட்டை ஏற்படுத்தும் கார்பைன்டை ஆக்ஸைடை வெளியிடாத, தூய்மையான ஹைட்ரஜன் எரிபொருளை பெருமளவில் தயாரிப்பதற்கான ஆய்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து புரொசீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயன்ஸ் அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பெட்ரோலியப் பொருள்களுக்கு மாற்றான தூய எரிபொருளாக ஹைட்ரஜன் வாயு உருவெடுத்து வருகிறது.
ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் முலக்கூறுகளின் இணைப்பான நீரில் மின்சாரம் பாய்ச்சி, ஆக்ஸிஜனை தனியாகப் பிரிப்பதன் மூலம் ஹைட்ரஜனை உருவாக்க முடியும்.
மின்பகுப்பு என்றழைக்கப்படும் இந்த எளிமையான முறையில், ஹைட்ரஜன் வாயு நேர் மின்னூட்டமும், ஆக்ஸிஜன் வாயு எதிர் மின்னூட்டமும் பெறும்.
அதனைத் தொடர்ந்து, காந்தத்தின் இரு எதிரெதிர் புலன்கள் மாற்று புலன்களை ஈர்ப்பது போல், நேர் மின்னூட்டம் பெற்ற ஹைட்ரஜன் வாயு எதிர் மின்முனையை நோக்கியும், எதிர் மின்னூட்டம் பெற்ற ஆக்ஸிஜன் நேர் மின்முனையையும் நோக்கிப் பிரியும்.
தற்போதைய நிலையில், இந்த முறையைப் பயன்படுத்தி தூய்மையான நீரிலிருந்து மட்டுமே ஹைட்ரஜன் தயாரிக்க முடியும்.
காரணம், கடல் நீரில் மின்பகுப்பாய்வு செய்யும்போது அதிலுள்ள உப்பும் எதிர் மின்னூட்டம் பெற்று, நேர் மின் முனையில் ஒட்டிக் கொள்ளும். இதன்காரணமாக நேர் மின்முனை வெகு விரைவில் அரிப்புக்குள்ளாகி, ஹைட்ரஜன் தயாரிக்கும் கருவி விரைவில் பழுதடைந்துவிடும். தூய நீரிலிருந்து மட்டுமே ஹைட்ரஜன் தயாரிக்க முடியும் என்ற நிலை இருந்தால் அது வர்த்தக ரீதியில் சாதகமாக இருக்காது என்ற நிலையில், மின்முனை அரிப்பைத் தடுக்கும் புதிய வழியை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அதன்படி, நிக்கல்-அயான் ஹைட்ராக்ஸைடால் செய்யப்பட்ட நேர் மின்முனையின் மேற்புறத்தில், நிக்கல் சல்ஃபைடு முலாம் பூசப்பட்டது.
மின்பகுப்பின்போது அந்த நிக்கல் சல்ஃபைடு எதிர் மின்னூட்டம் பெறும்; கடலிலுள்ள உப்பும் எதிர் மின்னூட்டம் பெறும். ஒரே வகை காந்தப் புலன்கள் ஒன்றையொன்று உந்தித் தள்வதைப் போல, ஒரே வகையிலான எதிர் மின்னூட்டம் பெற்ற உப்பை, நிக்கல் சல்ஃபைடு முலாம் உந்தித் தள்ளிவிடும். இதன் காரணமாக, நேர் மின்முனை மீது உப்பு ஒட்டிக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். அந்த வகையில், நேர் மின்முனையின் வாழ்நாள் பல மடங்கு நீடிக்கும்.
கடல் நீரில் சாதாரண முறையில் மின்பகுப்பின் மூலம் ஹைட்ரஜன் தயாரித்தால் நேர் மின்முனை 12 மணி நேரம் மட்டுமே நீடிக்கும். ஆனால், நிக்கல் சல்ஃபைடு முலாம் பூசப்பட்ட நேர் மின்முனை 1,000 மணி நேரத்துக்கும் மேல் நீடித்து உழைக்கும் என்று அந்த அறிவியல் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com