மியான்மர்: தேசத் துரோக வழக்கில் ராக்கைன் தலைவருக்கு 20 ஆண்டுகள் சிறை

மியான்மரில் தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் ராக்கைன் தலைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்ட


மியான்மரில் தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் ராக்கைன் தலைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
மியான்மர் ஆரகான் தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் அய் மங். இக்கட்சி ரோஹிங்கியா சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆரகான் கட்சியின் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக இருந்த அய் மங், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இவரின் பேச்சையடுத்து   நிகழ்ந்த வன்முறையில், 13 அரசு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். பல்வேறு இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. 
இதையடுத்து,  அய் மங் தேசத் துரோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது அவதூறு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 
இந்தநிலையில், அய் மங் மீதான வழக்கு மியான்மர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அய் மங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
ராக்கைன் பூர்வீக குடிகளுக்கும், மியான்மர் ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ராக்கைன் தலைவருக்கு எதிரான இந்த தீர்ப்பு அங்குள்ள மக்களிடையே மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com