ஈராக்கில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 100 மேற்பட்டோர் உயிரிழப்பு

ஈராக்கில் புத்தாண்டை கொண்டாட சென்றவர்களின் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் பெண்கள், குழந்தைகள் என 100-கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஈராக்கில், சுற்றுலாத்தலமான நெளராஸ் பகுதியில், குர்தீஷ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதற்காக அந்த படகில் வியாழக்கிழமை ஏராளமான மக்கள் ஏறிச் சென்றனர். அளவுக்கு அதிகமான பயணிகள் ஏறியதால் படகு திடீரென நீரில் மூழ்கியது.

இந்த துயரச்சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 55 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பலி எண்ணிக்கை உயரக்கூடும் என கூறப்படுகிறது.

இதனிடையே உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஈராக் பிரதமர் அதில் அப்துல் மெஹதி படகு விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com