சீனாவில் காவலாளி பணியில் ரோபோ..!

சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள குடியிருப்பு பகுதியில், காவலாளி பணியில் முதல்முறையாக அதிநவீன ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மனிதர்கள்
சீனாவில் காவலாளி பணியில் ரோபோ..!


சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள குடியிருப்பு பகுதியில், காவலாளி பணியில் முதல்முறையாக அதிநவீன ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மனிதர்கள் இரவு நேரத்தில் காவலாளி பணியில் ஈடுபடுவதை குறைக்கும் வகையில், இந்த ரோபோ பணியமர்த்தப்பட்டுள்ளது.
சீன விண்வெளி துறையின் கீழ் இயங்கும் பெய்ஜிங் விண்வெளி கட்டுப்பாட்டு நிறுவனத்தின் மூலம் இந்த ரோபா உருவாக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள மெய்வான் குடியிருப்பு பகுதியில் காவலாளி பணியில் ஈடுபடும் இந்த ரோபோவுக்கு மெய்போ என்று பெயரிடப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் வருபவர்களின் முகத்தினை ஸ்கேன் செய்து அவர்கள் யார் என்பதை இந்த ரோபோ தெரிவித்துவிடும். 
சந்தேகத்துக்கிடமான நபர்கள் குடியிருப்பினுள் நுழையும்போது, அங்குள்ள மக்களுக்கு அதுகுறித்து எச்சரிக்கை செய்யும் வகையில், இந்த ரோபோ அபாய மணியை ஒலிக்கும்.
இதுதொடர்பாக இந்த ரோபோவை தயாரித்த திட்டக் குழுவின் இயக்குநர் லியூ கான்ஜூன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரவு நேரங்களில் காவலாளி பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு பதிலாக, ரோபோக்களைப் பயன்படுத்தும் வகையில் மெய்போ உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த ரோபோவை சோதனை முறையில் பணியில் ஈடுபடுத்தி வருகிறோம். மனிதர்களின் முகத்தினை துல்லியமாக கண்டறியும் வகையில் தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சந்தேகத்துக்கிடமான செயல்கள் குடியிருப்பு வளாகத்தினுள் நிகழ்ந்தால், அதுகுறித்த எச்சரிக்கையை அங்குள்ள மக்களுக்கு இந்த ரோபோ தெரிவிக்கும். காவலாளி பணியில் ஈடுபடுவதுடன், வானிலை குறித்த தகவல்களையும் இந்த ரோபோ சொல்லும். குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், கதைகளை கூறுவதுடன் இசையையும் ஒலிக்கும். அதனால் குழந்தைகள் இந்த ரோபோவுடன் ஆர்வத்துடன் பேசுகின்றனர்.
மேலும், சீன அரசின் உதவியுடன் எங்கள் நிறுவனம்  இன்டெலிஜென்ட் ஹோம் என்ற திட்டத்தையும் தொடங்கியுள்ளது. அதன் மூலமாக, முகத்தை கண்டறிந்த பின்பு திறக்கும் கதவுகள், வீட்டில் உள்ள வயதானவர்களின் உடல்நிலையை அறியும் வகையில் அறிதிறன் கடிகாரங்கள் உள்ளிட்ட பொருள்களை தயாரித்து வருகிறோம். பெய்ஜிங்கில் உள்ள பல இடங்களில் இதை செயல்படுத்த உள்ளோம் என்று கூறினார்.
சீனாவின் பொருளாதாரம் கடந்த ஆண்டு சரிவை சந்தித்த நிலையில், அடுத்த கட்ட வளர்ச்சியாக, மக்களிடம் செயற்கை நுண்ணறிவு பொருள்களை கொண்டு சேர்ப்பதில் அந்நாடு ஆர்வம் காட்டி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com