"போயிங் மேக்ஸ் 737 விமானத்தின் குறைபாட்டுக்கு தீர்வு தயார்'

போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தின் மென்பொருள் குறைபாட்டுக்கு அந்த நிறுவனம் தீர்வு கண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
"போயிங் மேக்ஸ் 737 விமானத்தின் குறைபாட்டுக்கு தீர்வு தயார்'

போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தின் மென்பொருள் குறைபாட்டுக்கு அந்த நிறுவனம் தீர்வு கண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, விமானப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:
ஐந்து மாத இடைவெளியில் இரண்டு முறை விபத்துக்குள்ளாகி, 346 பேரது உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானங்களின் பயன்பாட்டுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடுவானில் செயலிழந்து போவதைத் தடுப்பதற்கான மென்பொருளில் உள்ள குறைபாடே, அந்த ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த குறிப்பிட்ட மென்பொருளின் குறைபாட்டுக்கு போயிங் நிறுவனம் தீர்வு கண்டுள்ளதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 737 மேக்ஸ் ரக விமானங்கள் மீண்டும் இயக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 
இதற்கிடையே, 737 மேக்ஸ் ரக விமானத்திலுள்ள மென்பொருள் குறைபாட்டுக்கு, அடுத்த வாரத் தொடக்கத்தில் அந்த நிறுவனம் தீர்வு அளிக்கும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து அமைப்பு எதிர்பார்ப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், அந்தத் தீர்வு கிடைத்த பிறகு 737 மேக்ஸ் ரக விமானங்களை மீண்டும் போக்குவரத்துக்குப் பயன்படுத்த எவ்வளவு காலத்தில் அனுமதி அளிப்பது என்பது குறித்து அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்திலிருந்த 189 பேரும் உயிரிழந்தனர்.
அதேபோல், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸýக்குச் சொந்தமான 737 மேக்ஸ் ரக விமானம் கென்ய தலைநகர் நைரோபி விமான நிலையம் அருகே இந்த மாதம் 10-ஆம் தேதி விழுந்து நொறுங்கியதில், அதிலிருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.
இதுதவிர, 737 மேக்ஸ் ரக விமானத்தின் செயல்பாடு குறித்து விமானிகள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில், அமெரிக்காவிலும், பிற நாடுகளிலும் அந்த ரக விமானங்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com