துருக்கி படகு விபத்தில் 7 அகதிகள் சாவு

துருக்கியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 சிறுவர்கள் உட்பட 7 அகதிகள் உயிரிழந்தனர். 
துருக்கி படகு விபத்தில் 7 அகதிகள் சாவு

துருக்கியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 சிறுவர்கள் உட்பட 7 அகதிகள் உயிரிழந்தனர். துருக்கியின் ஏகன் கடல்பகுதியில் கிரேக்கத் தீவுகள் நோக்கி படையெடுக்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மிகவும் ஆபத்து வாய்ந்த கடல்பகுதியான இங்கு ரப்பர் படகுகளின் அதிக எண்ணிக்கையிலான அகதிகள் நாடு கடத்தப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், இதே கடல்பகுதியில் 5 சிறுவர்கள் மற்றும் அகதிகளை நாடு கடத்துபவர் உட்பட 17 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 சிறுவர்கள் மற்றும் 2 அகதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேர் துருக்கி கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இந்த ஆபத்தான பணத்தை அகதிகள் மேற்கொண்டு வரும் நிலையில், 2019-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 7,100 அகதிகள் இவ்வழியில் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, துருக்கி கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய சிரியாவைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஆலன் குர்டியின் புகைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் அகதிகள் மீதான பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com