பன்மொழி விக்கிபீடியாவுக்கு சீனா தடை

இணையதள தகவல் களஞ்சியமான பன்மொழி விக்கிபீடியாவுக்கு, சீனா முழுமையாக தடை விதித்துள்ளது.
பன்மொழி விக்கிபீடியாவுக்கு சீனா தடை


இணையதள தகவல் களஞ்சியமான பன்மொழி விக்கிபீடியாவுக்கு, சீனா முழுமையாக தடை விதித்துள்ளது.
இதுகுறித்து இணையதள தணிக்கையை ஆய்வு செய்து வரும் ஓபன் அப்சர்வேடரி ஆஃப் நெட்வொர்க் இன்டர்ஃபரன்ஸ் அமைப்பு கூறியுள்ளதாவது:
விக்கிபீடியா இணையதள தகவல் களஞ்சியத்தில், சீன மொழி தவிர்த்து ஏராளமான மாற்று மொழிகளில் விவரங்களை தேடுவதற்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், தடை செய்யப்படும் மொழிகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வந்தன.
தற்போது அனைத்து மாற்று மொழிகளும் தடை செய்யப்பட்டு, பன்மொழி விக்கிபீடியா முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
சீன மொழில் அளிக்கப்படும் தணிக்கை செய்யப்பட்ட தகவல்களை மட்டுமே சீனர்கள் விக்கிபீடியாவில் பெற முடியும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com