600 கி.மீ. வேகத்தில் பறக்கும் காந்த ரயில்: சீனா அறிமுகம்

மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் பறக்கும் காந்தவிசை ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
600 கி.மீ. வேகத்தில் பறக்கும் காந்த ரயில்: சீனா அறிமுகம்

மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் பறக்கும் காந்தவிசை ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான "சைனா டெய்லி' நாளிதழ் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
காந்த விசையில் இயங்கும் புதிய அதிவேக ரயிலை பொதுத் துறை நிறுவனமான சிஆர்ஆர்சி கிங்டாவ்  சிஃபாங் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
ஷாங்டாங் மாகாணத்திலுள்ள துறைமுக நகரமான கிங்டோவில் இந்த ரயில் இயக்கிக் காட்டப்பட்டது. 
இந்த ரயில் மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது ஆகும். வர்த்தக ரீதியில் இது இயக்கப்படும்போது, விமான நிறுவனங்களுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும்.
அதிவேக ரயில் தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களையும் மிகுந்த திறனுடன் பயன்படுத்தி இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளதாக, இதனை வடிவமைத்த சிஆர்ஆர்சி கிங்டாவ் சிஃபாங் நிறுவன பொறியாளர்கள் தெரிவித்தனர்.
நிறுவனம் உருவாக்கியுள்ள மாதிரி ரயில், வேகமான பயன்பாட்டுக்கு ஏற்ற முறையில் முழுமையாக செயல்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
சீனாவில் 2016-ஆம் ஆண்டிலிருந்து 2020-ஆம் ஆண்டுக்குள் அதிநவீன ரயில் வசதியை ஏற்படுத்துவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் உருவாக்கிய 13-ஆவது ஐந்தாண்டு திட்டத்தின்கீழ் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது என்று "சைனா டெய்லி' தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com