சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஹுவாவேவும் பங்கேற்கலாம்

அமெரிக்க - சீன வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஹவாவேவும் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஹுவாவேவும் பங்கேற்கலாம்

அமெரிக்க - சீன வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஹவாவேவும் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டனிலுள்ள அதிபர் மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது:
அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் ஹுவாவே நிறுவனம், இதுகுறித்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், சீனக் குழுவினருடன் இணைந்து வர்த்தகப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கலாம்.
இருந்தாலும், இந்த விவகாரத்தை சீனா எவ்வாறு கையாளும் என்பது தெரியவில்லை.
கூடுதல் இறக்குமதி வரி விதிப்பின் மூலம் சீனாவிடமிருந்து கோடிக்கணக்கான டாலர்களை வசூலித்து வருகிறோம் என்றார் அவர்.
சீனா நியாயமற்ற வர்த்தகக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்தார். அதற்குப் பதிலடியாக சீனாவும் அமெரிக்கப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்தது.
இந்த நிலையில், உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்புப் பொருள் தயாரிப்பு நிறுவனமான சீனாவின் ஹுவாவே தயாரிப்புகளை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் வகையிலான உத்தரவை அமெரிக்க அரசு அண்மையில் பிறப்பித்தது.
இதற்கு சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com