மோடி - டிரம்ப் அடுத்த மாதம் சந்திப்பு

ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஜி20 நாடுகள் மாநாட்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
மோடி - டிரம்ப் அடுத்த மாதம் சந்திப்பு

ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறும் ஜி20 நாடுகள் மாநாட்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்தித்துப் பேசவுள்ளனர்.
பிரதமர் மோடியை வெள்ளிக் கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தேர்தல் வெற்றிக்காக அமெரிக்காவின் சார்பில் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "ஜப்பானின் ஒசாகா நகரில் அடுத்த மாதம் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. அத்துடன், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அதிபர் டிரம்ப்பும்,  பிரதமர் மோடியும் சந்தித்து பேசுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியா, அமெரிக்கா இடையிலான நல்லுறவில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றை தொடர்ந்து முன்னெடுக்க  இரு தலைவர்களும் ஆர்வத்துடன் உள்ளனர்' என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com