தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா திகழ்கிறது: பிரதமர் மோடி

இந்தியா தற்போது 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று பாங்காக்கில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். 
தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா திகழ்கிறது: பிரதமர் மோடி

இந்தியா தற்போது 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று பாங்காக்கில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

எனது தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்றபோது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 5 ஆண்டுகளில், அதை கிட்டத்தட்ட 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுனோம். இதுதான் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் பற்றிய கனவு விரைவில் நனவாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. தற்போது இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் பாதுகாப்பாக உணர்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டில் நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையை குறைத்துள்ளோம். 

வணிகம் செய்வது எளிமையாக்கப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடு, காப்புரிமை, உற்பத்தித்திறன், உள்கட்டமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வரி, வரி விகிதங்கள், ஊழல் ஆகியவை வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் தொழில் தொடங்குவது எளிமையாக்கப்பட்டுள்ளது. 

இதனால் தொழில் தொடங்க சிறந்த இடமாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் தொழில் தொடங்க இதுவே சிறந்த நேரமாகும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com