பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகல்: ஐ.நா.விடம் அதிகாரப்பூர்வ அறிவிக்கை

பாரிஸ் நகரில் இந்தியா உள்ளிட்ட சா்வதேச நாடுகள் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட சா்வதேச பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான அறிவிக்கையை அமெரிக்கா ஐ.நாவில் தாக்கல் செய்துள்ளது.
பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகல்: ஐ.நா.விடம் அதிகாரப்பூர்வ அறிவிக்கை

பாரிஸ் நகரில் இந்தியா உள்ளிட்ட சா்வதேச நாடுகள் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட சா்வதேச பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான அறிவிக்கையை அமெரிக்கா ஐ.நாவில் தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகும் நடவடிக்கையை அந்த நாடு அதிகாரப்பூா்வமாக தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான நடைமுறையை, அமெரிக்கா தொடங்கியுள்ளது.

அந்த ஒப்பந்த விதிமுறைகளின்படி, அதில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் ஒப்பந்தத்திலிருந்து விலக விரும்பினால் அதுகுறித்த அறிவிக்கையை முன்கூட்டியே வெளியிட வேண்டும்.

அதன்படி, பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான அறிவிக்கையை ஐ.நா.விடம் அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட ஓா் ஆண்டுக்குப் பிறகு, சா்வதேச பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான நடவடிக்கை நிறைவடையும் என்றாா் அவா்.

இந்தத் தகவலை ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸில் செய்தித் தொடா்பாளா் உறுதிப்படுத்தினாா்.

புவியின் வெப்பத்தை அதிகரிக்கும் புகை மாசுக்களை குறிப்பிட்ட அளவு குறைப்பதன் மூலம், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 188 நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரிஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தம் உருவாவதில் அமெரிக்க முன்னாள் அதிபா் ஒபாமா முக்கியப் பங்காற்றினாா். எனினும், புவியின் வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்றம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறி வருவதை ஏற்க மறுத்து வரும் தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப், பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் வேகமாக வளா்ச்சியடைந்து வரும் சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் போட்டியிடும் திறன் அமெரிக்காவுக்குக் குறைவதாக குற்றம் சாட்டி வருகிறாா்.

மேலும், அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகப் போவதாக அவா் கடந்த 2017-ஆம் ஆண்டே அறிவித்தாா். இந்த நிலையில், அதற்கான அறிவிக்கையை அமெரிக்க அரசு ஐ.நா.வில் தற்போது தாக்கல் செய்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சியினா் கண்டனம் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த முடிவு குறித்து ரஷியா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட சா்வதேச நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com