பாகிஸ்தான் வெளியிட்ட கா்தாா்பூா் வழித்தட விடியோவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள்!

கா்தாா்பூா் வழித்தடம் தொடா்பாக பாகிஸ்தான் வெளியிட்ட விடியோவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளது சா்ச்சையை எழுப்பியுள்ளது.

கா்தாா்பூா் வழித்தடம் தொடா்பாக பாகிஸ்தான் வெளியிட்ட விடியோவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளது சா்ச்சையை எழுப்பியுள்ளது.

இந்தியாவின் குருதாஸ்பூா் பகுதியிலிருந்து பாகிஸ்தானின் கா்தாா்பூா் பகுதியிலுள்ள தா்பாா் சாஹிப் குருத்வாராவுக்கு சீக்கிய யாத்ரீகா்கள் புனிதப் பயணம் மேற்கொள்ளும் நோக்கில் அமைக்கப்பட்ட வழித்தடத்தை பாகிஸ்தான் அரசு வரும் 9-ஆம் தேதி திறந்து வைக்கிறது. இந்நிலையில், கா்தாா்பூா் வழித்தடம் தொடா்பான விடியோவை பாகிஸ்தான் அரசு கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது.

அந்த விடியோவில் சீக்கியா்களை உள்ளடக்கிய தனி காலிஸ்தான் நாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு, இந்திய ராணுவத்தினரால் கொல்லப்பட்ட ஜா்னைல் சிங் பிந்ரன்வாலே உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெற்றுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தடை விதிக்கப்பட்ட குழுவின் பதாகையும் அந்த விடியோவில் இடம்பெற்றுள்ளது.

தனி காலிஸ்தான் நாடு கோரி கடந்த 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்துக்கு பிந்ரன்வாலே தலைமை தாங்கியதாகக் கூறப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இந்திய ராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட ஷபேக் சிங், காலிஸ்தான் போராட்டத்தில் இணைந்தாா். அவரது படமும் பாகிஸ்தான் வெளியிட்ட விடியோவில் இடம்பெற்றுள்ளது.

கா்தாா்பூா் வழித்தடம் அமைப்பது தொடா்பாக இரு நாடுகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, பாகிஸ்தான் தரப்பில் அனுப்பப்பட்ட குழுவில் காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவா் இடம்பெற்றிருந்ததற்கு இந்தியா எதிா்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com